< Back
தேசிய செய்திகள்
நடப்பு காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றம் இல்லை..!
தேசிய செய்திகள்

நடப்பு காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்ட வட்டியில் மாற்றம் இல்லை..!

தினத்தந்தி
|
1 July 2022 6:38 AM IST

ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நடப்பு காலாண்டுக்கான வட்டிவிகிதம் பற்றிய அறிவிப்பை நேற்று மத்திய அரசு வெளியிட்டது.

புதுடெல்லி,

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவிகிதம், காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒருதடவை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான நடப்பு காலாண்டுக்கான வட்டிவிகிதம் பற்றிய அறிவிப்பை நேற்று மத்திய அரசு வெளியிட்டது.

வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை. முந்தைய காலாண்டில் நிர்ணயிக்கப்பட்ட வட்டிவிகிதமே நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

அதன்படி, பொது வருங்கால வைப்புநிதி (7.1 சதவீதம்), தேசிய சேமிப்பு சான்றிதழ் (6.8 சதவீதம்), ஓராண்டு கால டெபாசிட் திட்டம் (5.5 சதவீதம்), மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகால சேமிப்பு திட்டம் (7.4 சதவீதம்), செல்வமகள் சேமிப்பு திட்டம் (7.6 சதவீதம்), சேமிப்பு டெபாசிட் (4 சதவீதம்) என அனைத்துக்கும் பழைய வட்டிவிகிதமே நீடிக்கும்.

மேலும் செய்திகள்