< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்
|22 Sept 2022 11:08 PM IST
காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை இந்திய ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்து உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவ வீரர்கள் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பகுதியில் சில பொருட்கள் கிடந்துள்ளன.
அவற்றில் ஒரு வானொலி பெட்டி, எறிகுண்டுகள் மற்றும் உலோக பெட்டி ஒன்றும் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றை கைப்பற்றிய வீரர்கள் ஆய்வு மேற்கொண்டதில் அந்த உலோக பெட்டி சக்தி வாய்ந்த வெடிகுண்டாக இருக்க கூடும் என கூறப்படுகிறது.
எனினும், அதுபற்றிய முழுமையான விவரங்கள் தெரிய வரவில்லை. இதனால், ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.