< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 5.3 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
|5 April 2024 3:54 AM IST
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிம்லா,
இமாச்சல பிரதேசம் சம்பா பகுதியில் நேற்று இரவு 9.34 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சம்பா பகுதியில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள பகுதிகளிலும், மணாலி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.