டிஜிட்டல் மீட்டரால் மின்கட்டணம் அதிகரிப்பா?; பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு
|டிஜிட்டல் மீட்டரால் மின்கட்டணம் அதிகரித்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு மின்வினியோக கழகமான பெஸ்காம், மாநகரில் உள்ள வீடுகளுக்கு டிஜிட்டல் மீட்டர்களை பொருத்தி வருகிறது. இதற்காக ரூ.116.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 3 லட்சம் வீடுகளுக்கு டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளது. பழைய மின் மீட்டரை அகற்றிவிட்டு இலவசமாக டிஜிட்டல் மீட்டரை பொருத்துவதாக பெஸ்காம் கூறியுள்ளது. இந்த நிலையில் டிஜிட்டர் மீட்டர் பொருத்திய சில வீடுகளுக்கு மின்கட்டணம் பல மடங்கு அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கான காரணம் பற்றி கேட்டால் மின்வாரிய ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிலர் கூறியுள்ளனர். மேலும் டிஜிட்டல் மீட்டரில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கிறதா என்பதையும் மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சரியான மின்கட்டணம் வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.