< Back
தேசிய செய்திகள்
ஜெய்ப்பூரில் இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுக்கக் கூடாது என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு
தேசிய செய்திகள்

ஜெய்ப்பூரில் இஸ்லாமியர்களுக்கு வீடு கொடுக்கக் கூடாது என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

தினத்தந்தி
|
28 Feb 2024 4:08 PM IST

இஸ்லாமியர்களுக்கு வீடு வாடைக்கோ அல்லது விற்பனைக்கோ கொடுக்க வேண்டாம் என போஸ்டரில் எழுதப்பட்டிருந்தது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நந்தபுரி காலனியில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், இஸ்லாமியர்களுக்கு வீடுகளை வாடகைக்கோ அல்லது விற்பனைக்கோ கொடுக்க வேண்டாம் என எழுதப்பட்டிருந்தது.

மேலும் இஸ்லாமிய ஜிகாத்துக்கு எதிராக இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், போலீசார் அங்கு சென்று சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அப்புறப்படுத்தினர்.

மேலும் அங்குள்ள மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி வார்டு கவுன்சிலர் அனிதா ஜெயின் கூறுகையில், அண்மையில் அங்குள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை ஒரு இஸ்லாமிய குடும்பத்திற்கு விற்றதாகவும், அதைத் தொடர்ந்து சில நாட்களில் இத்தகைய போஸ்டர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்