பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் குறித்து அவதூறு போஸ்டர்ஒட்டிய 3 பேர் கைது
|பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் குறித்து அவதூறு போஸ்டர்ஒட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18-ந் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. தாஜ் வெஸ்ட் என்ட் ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமாரும் கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருகை தந்த தலைவர்களை வரவேற்பதற்காக சாலைகளில் ஆங்காங்கே பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் நிதிஷ்குமாருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சேஷாத்திரிபுரத்தை சேர்ந்த மோகன், நந்தகுமார் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.