< Back
தேசிய செய்திகள்
சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு 3 மந்திரிகளின் ஆபாச சி.டி.க்கள் வெளிவரும்; காங்கிரஸ் சொல்கிறது
தேசிய செய்திகள்

சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு 3 மந்திரிகளின் ஆபாச சி.டி.க்கள் வெளிவரும்; காங்கிரஸ் சொல்கிறது

தினத்தந்தி
|
7 Jan 2023 3:05 AM IST

சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு 3 மந்திரிகளின் ஆபாச சி.டி.க்கள் வெளிவரும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சாண்ட்ரோ ரவி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். அப்படி என்றால் அவர், முதல்-மந்திரியுடன் தனக்கு நல்ல அறிமுகம் உள்ளதாக கூறியது எப்படி?. முதல்-மந்திரியின் மகன் அவருக்கு 'இனிப்பான சகோதரர்' ஆக இருப்பது எப்படி?. மந்திரிகள் அனைவருடனும் அவருக்கு நல்ல பழக்கம் இருக்கும் நிலையில் உங்களுக்கு மட்டும் அறிமுகம் இல்லாமல் இருப்பது எப்படி?. சில மந்திரிகள் தங்களுக்கு எதிரான ஆபாச சி.டி.யை வெளியிட தடை ஆணை பெற்றுள்ளனர். அந்த சி.டி.க்கள் சாண்ட்ரோ ரவியிடம் உள்ளதா?. விதான சவுதாவில் ரூ.10 லட்சத்துடன் பொதுப்பணித்துறை என்ஜினீயர் ஜெகதீஷ் சிக்கியுள்ளார். அப்போது ஒரு மந்திரியின் தனி செயலாளரின் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அது எந்த மந்திரியின் தனி செயலாளர்?. ஜெகதீசை விட்டுவிடுமாறு போலீசாரிடம் கூறிய மந்திரியின் தனி செயலாளர் யார்?. அதன் பிறகு போலீசாரிடம் போனில் பேசிய மந்திரி யார்?. இந்த ரகசியத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிடுவாரா? அல்லது நாங்கள் அதை வெளியிடட்டுமா?. சங்கராந்தி பண்டிகைக்கு பிறகு 3 மந்திரிகளின் ஆபாச சி.டி.க்கள் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது. இந்த சி.டி.க்களின் பின்னணியில் சாண்ட்ரோ ரவியின் கைவண்ணம் இருப்பது போல் தெரிகிறது.

இவ்வாறு காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்