< Back
உலக செய்திகள்
ரோம் ஆஸ்பத்திரியில் போப் ஆண்டவருக்கு மருத்துவ பரிசோதனை

கோப்புப்படம்

உலக செய்திகள்

ரோம் ஆஸ்பத்திரியில் போப் ஆண்டவருக்கு மருத்துவ பரிசோதனை

தினத்தந்தி
|
30 March 2023 2:09 AM IST

ரோம் ஆஸ்பத்திரியில் போப் ஆண்டவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

வாடிகன் சிட்டி,

போப் பிரான்சிஸ் (வயது 86) ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரிக்கு நேற்று திடீரென சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

போப் ஆண்டவர் ஆஸ்பத்திரி சென்றது தொடர்பாக விரிவான விவரங்கள் எதையும் வாடிகன் வெளியிடவில்லை. எனினும் ஏற்கனவே திட்டமிட்டப்பட்ட பரிசோதனைகளுக்காக அவர் ஆஸ்பத்திரி சென்றதாக கூறியிருந்தது.

போப் பிரான்சிஸ் சமீப காலமாக முதுமை தொடர்பான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்