< Back
தேசிய செய்திகள்
பொங்கல் பண்டிகை: தமிழில் வாழ்த்துக் கூறிய கேரள முதல் மந்திரி
தேசிய செய்திகள்

பொங்கல் பண்டிகை: தமிழில் வாழ்த்துக் கூறிய கேரள முதல் மந்திரி

தினத்தந்தி
|
15 Jan 2023 9:07 PM IST

பொங்கல் பண்டிகையை ஒட்டி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தமிழில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் மக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதுப்பானையில் பொங்கல் இட்டு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையை ஒட்டி கிராமப்புறங்களில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அன பல தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அந்த வகையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் பொங்கல் பண்டிகையை ஒட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார். பினராயி விஜயன் வெளியிட்ட பதிவில், அனைவருக்கும் இனிய #பொங்கல் வாழ்த்துகள். உழவு செய்து அனைவரையும் வாழவைக்கும் உழவர்கள், செழிப்பையும் அளவற்ற மகிழ்ச்சியையும் பெறவேண்டும். இந்த நன்னாளில் கோடிக்கணக்கான மக்களில் ஒருவராக பங்கேற்று கொண்டாடுகிறோம். பொங்கலோ பொங்கல்!" என்று பதிவிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்