< Back
தேசிய செய்திகள்
மங்களூருவில்  பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

மங்களூருவில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
5 Aug 2023 12:15 AM IST

மங்களூருவில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள சுபாஸ்நகரை சேர்ந்தவர் பாஸ்கர் பூஜாரி. இவரது மனைவி தாட்சாயினி. இவர்களது மகன் சுஷாந்த் (வயது17). இவர் பி.யூ.சி. படித்து முடித்துள்ளார். இந்தநிலையில் சுஷாந்துக்கு பாலிடெக்னிக் படிக்க ஆசை இருந்தது.

அதன்படி பெற்றோர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவரை மங்களூருவில் உள்ள கர்நாடக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்தனர். இந்தநிலையில் சுஷாந்த் முதல் நாள் கல்லூரிக்கு சென்றார். அப்போது அவருக்கு பெற்றோர் ரூ.500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை சுஷாந்த் கல்லூரிக்கு புறப்பட்டு கொண்டு இருந்தார். அப்போது பெற்றோரிடம் அவர் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஷாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்