அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான்... பூரி சாமியாரின் பேச்சால் பரபரப்பு
|பிரித்து ஆளும் கொள்கை, வன்முறையை தூண்டி விடுவது என அரசியல்வாதிகள் என்றாலே இப்படித்தான் செயல்படுவார்கள் என்று பூரி சாமியார் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் ராய்ப்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பூரி சாமியாரான நிச்சலனந்த சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது அரசியல் தலைவர்களின் பண்புகளை பற்றி குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் பிரித்து ஆளும் கொள்கையை தத்தெடுத்து உள்ளனர். அவர்கள் வன்முறையை தூண்டி விடுகின்றனர். மோதல்களையும், சண்டை மூட்டி விடும் வேலைகளையும் செய்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் தங்களது விருப்பங்களை நிறைவேற்றி கொள்வதற்காக எப்போதும், தலித் மற்றும் தலித் அல்லாதவர்களுக்கு இடையே விவகாரங்களை கிளப்பி விடுவதும், அறிவார்ந்த நபர்களுக்கும், சாதாரண பணியாளர்களுக்கும் இடையேயான விவகாரங்களை எழுப்புவதும் மற்றும் பிற விசயங்களையும் மேற்கொள்கின்றனர்.
அரசியல்வாதிகளே ஒரு குழப்பம் உருவாவதற்கான பொறுப்பாளிகள் ஆவார்கள். அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். அவர்களுக்கு அரசியலுக்கான விளக்கம் தெரியாது. ஆனால், அவர்களே அரசியல்வாதிகள் என தங்களை அழைத்து கொள்வார்கள் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
இந்த உலகை, 13 டாப் தொழிற்சாலை நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. நாட்டில் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் நன்றாக அமர்ந்து ஆட்சி செய்து வருகின்றன. அவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதில் அரசியல்வாதிகள் திறமையாக செயல்படுகின்றனர்.
இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க அரசியல்வாதிகளுக்கு தெரியும். ஆனால், நாட்டை ஆள தெரியாது என்றும் கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.