< Back
தேசிய செய்திகள்
Amit Shah, Jairam Ramesh
தேசிய செய்திகள்

அரசியல் சாணக்கியன் கையேந்தி நிற்கிறார் - அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு

தினத்தந்தி
|
5 Jun 2024 2:45 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின.

மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், "அரசியல் சாணக்கியர் என்று சொல்லிக் கொண்ட அமித்ஷா, கடைசியில் தான் விரித்த வலையிலேயே மிகவும் மோசமாக மாட்டிக்கொண்டார். ஒவ்வொரு அடியிலும் பொதுமக்களை முட்டாளாக்கி, மிகப்பெரிய முதலாளிகளுக்கு சவால் விடும் ராஜாக்களின் ராஜா, இன்று கிண்ணத்துடன் கையேந்தி பல கதவுகளைத் தட்டி, எம்.பி.,க்களை நன்கொடையாகத் தேடிக் கொண்டிருக்கிறார்." என்று விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்