< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தோனேசியாவை மீண்டும் மிரட்டும் போலியோ: தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
|29 Nov 2022 4:46 AM IST
இந்தோனேசியாவில் மீண்டும் போலியோ தொற்று அதிகரித்து வருவதால் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் போலியோ நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த நோய் அங்கு மீண்டும் தலை தூக்கியுள்ளது.
சுமாத்ரா தீவில் உள்ள ஆச்சே மாகாணத்தில் கடந்த மாதம் 7 வயது சிறுவனுக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மேலும் 3 சிறுவர்களுக்கு நோய் பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்கு போலியோவை ஒழிக்க குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுமத்ரா தீவின் சிக்லி நகரில் உள்ள பள்ளிக்கூடங்களில் நேற்று போலியோ தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. பெற்றோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.