< Back
தேசிய செய்திகள்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
20 Jun 2022 2:31 AM IST

பெங்களூருவில் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு யஸ்வந்தபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சுதர்சன் செட்டி (வயது 45). இவர் அனுமந்தநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். முதலில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், பின்னர் கர்நாடக போலீஸ் துறையில் சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் செட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான சுதர்சன் செட்டி, அதனை விட முடியாமல் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து யஸ்வந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்