< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்
தேசிய செய்திகள்

பஞ்சாப் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்

தினத்தந்தி
|
10 Dec 2022 5:25 AM GMT

பாகிஸ்தான் எல்லையில் உள்ள மாவட்டத்தில் இந்த போலீஸ் நிலையம் அமைந்துள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் தரன் தரன் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது.

இதனிடையே, தரன் தரன் மாவட்டத்தில் அம்ரித்சர் - பதிண்டா நெடுஞ்சாலையோரம் சர்ஹலி என்ற நகரில் போலீஸ் நிலையம் உள்ளது.

இந்நிலையில், சர்ஹலி போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போலீஸ் நிலையத்தின் சுவர், ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ராக்கெட் லாஞ்சர் போலீஸ் நிலையத்திற்குள் வந்து விழுந்தது. இந்த தாக்குதலால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. போலீஸ் நிலையத்தின் ஜன்னல்,கதவு கண்ணாடி, சுவர் இந்த தாக்குதலில் சேதமடைந்தது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் சொந்த ஊர் சர்ஹலி. பயங்கரவாதி ஹர்விந்தர் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் பஞ்சாப் போலீஸ் நுண்ணறிவு பிரிவின் தலைமை அலுவலகத்தில் நடந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் ஹர்விந்தர் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

பாகிஸ்தான் எல்லையோர மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும் செய்திகள்