< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் அனுமதியின்றி பறந்த டிரோனை கைப்பற்றிய போலீசார்
|14 Feb 2023 5:42 AM IST
காஷ்மீரில் அனுமதியின்றி பறந்த டிரோனை போலீசார் கைப்பற்றினர்.
காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிஷ்னா பகுதியில் உள்ள பந்த்ராலி கிராமத்தில் நேற்று வானில் ஒரு டிரோன் பறந்து கொண்டிருந்தது. இதுபற்றி அந்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அந்தப்பகுதிக்கு விரைந்து வந்து டிரோனை கைப்பற்றினர். போலீசார் விசாரணையில் இந்த டிரோன் திருமண விழாவை படம் பிடிக்க பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, எல்லைக்கு அப்பால் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், பணம் மற்றும் போதைப்பொருட்களை கொண்டுசெல்ல பயங்கரவாத அமைப்புகள் டிரோன்களைப் பயன்படுத்துகின்றன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.