< Back
தேசிய செய்திகள்
அசாமில் வெடிப்பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்
தேசிய செய்திகள்

அசாமில் வெடிப்பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்

தினத்தந்தி
|
18 Jan 2024 3:33 AM IST

காரில் இருந்த 2 பேர், போலீசை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் வெடிப்பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அங்குள்ள துப்தாரா என்ற பகுதியில் தீவிர சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது ஒரு காரில் பல்வேறு ஆபத்தான வெடிப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த காரில் 2 பேர் இருந்ததாகவும், அவர்கள் போலீசை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் அந்த காரையும், அதில் இருந்த வெடிப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதில் 1,800 டெட்டோனேட்டர்கள், 2,356 ஜெலட்டின் குச்சிகள், பேட்டரிகள், வயர்கள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்