திரிபுராவில் போலீசார் அதிரடி வேட்டை; ஆட்கடத்தல் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது
|அகர்தலா அரசு ரெயில்வே காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த வழக்கு ஒன்றின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
அகர்தலா,
நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் எல்லையையொட்டிய இடங்களில் போதை பொருள் கடத்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன என போலீசாருக்கு தகவல் சென்றது.
இந்நிலையில், வடகிழக்கு பகுதியில் அமைந்த திரிபுராவில், எல்லை பாதுகாப்பு படையினருடன் கூட்டாக இணைந்து திரிபுரா போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு ஆட்கடத்தல் வழக்குடன் தொடர்பு இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்பின், அவர்கள் அம்தலி காவல் நிலையத்திற்கு நேற்றிரவு அழைத்து செல்லப்பட்டனர்.
இதுபற்றி போலீசார் வெளியிட்ட செய்தியில், அவர்கள் இருவரும் லிட்டன் மியா மற்றும் சஜால் மியா என அடையாளம் காணப்பட்டனர். அகர்தலா அரசு ரெயில்வே காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த வழக்கு ஒன்றின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு முன், மேற்கு திரிபுராவில் சாரிபரா பகுதியில் ஆட்கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். வங்காளதேச நாட்டின் பிரமன்பாரியா மாவட்ட பகுதியை சேர்ந்த கதீஜா பேகம் (வயது 36) என அவர் அடையாளம் காணப்பட்டார்.
அவரை எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து அரசு ரெயில்வே போலீசார், கூட்டாக சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் நேற்று மதியம் கைது செய்தனர்.