< Back
தேசிய செய்திகள்
சாலை பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீஸ்காரர்
தேசிய செய்திகள்

சாலை பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து போலீஸ்காரர்

தினத்தந்தி
|
16 Oct 2022 12:15 AM IST

மல்லேசுவரத்தில் சாலை பள்ளத்தை போக்குவரத்து போலீஸ்காரர் சீரமைத்தார்.

பெங்களூரு:

பெங்களூரு சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலைகளில் இடைவிடாது போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், ஆங்காங்கே திடீர் பள்ளங்கள் ஏற்படுகின்றன. இந்த பள்ளங்களால் விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் ஆயிரத்துக்கும் அதிகமான சாலை பள்ளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மல்லேசுவரம் போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாண்டல் சோப் பேக்டரி சந்திப்பு பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தை மல்லேசுவரம் போக்குவரத்து போலீஸ்காரர், நாகப்பா தின்டிவாடா, பொது மக்கள் உதவியுடன் சீரமைத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

மேலும் செய்திகள்