< Back
தேசிய செய்திகள்
பணியில் அலட்சியமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்
தேசிய செய்திகள்

பணியில் அலட்சியமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
24 Aug 2023 3:00 AM IST

பணியில் அலட்சியமாக போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஹாசன்:

ஹாசன் மாவட்ட சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் பயன்படுத்தப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 19-ந் தேதி துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் ஹாசன் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சிறை கைதிகள் செல்போன், கஞ்சா, சிகரெட், பேட்டரி, சார்ஜர் உள்பட பல்வேறு பொருட்கள் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்து 18 செல்போன்கள், கஞ்சா, சிகரெட் பாக்கெட்டுகள், பேட்டரிகள், செல்போன் சார்ஜர்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. அலோக் மோகன் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் விசாரணை நடத்தி, டி.ஐ.ஜி. அலோக் மோகனிடம் அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையில் சிறைத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், சிறை அதிகாரிகள் குதுபுதீன் தேசாய், ஜாதவ், பட்டீல் ஆகியோரின் அலட்சியத்தால் தவறுகள் நடந்திருப்பதாக தெரியவந்தது.

மேலும் இவர்கள் கைதிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து டி.ஐ.ஜி. அலோக் மோகன், பணியில் அலட்சியமாக செயல்பட்ட சிறைத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சுரே்ஷ, சிறைத்துறை அதிகாரிகளான குதுபுதீன் தேசாய், ஜாதவ், பட்டீல் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்