< Back
தேசிய செய்திகள்
லாரி மீது கார் மோதியது: போலீஸ் இன்ஸ்பெக்டர், மனைவி சாவு
தேசிய செய்திகள்

லாரி மீது கார் மோதியது: போலீஸ் இன்ஸ்பெக்டர், மனைவி சாவு

தினத்தந்தி
|
8 Dec 2022 12:15 AM IST

லாரி மீது கார் மோதிய விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர், மனைவி உயிரிழந்தனர்.

கலபுரகி:

விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ரவி உக்குந்தா (வயது 43). இவரது மனைவி மது (40). இந்த 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் ரவி, தனது மனைவி மதுவுடன் சிந்தகியில் இருந்து கலபுரகி நோக்கி காரில் சென்று கொண்டு இருந்தார். காரை ரவி ஓட்டினார். கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகா நெலோகி கிராஸ் பகுதியில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது ரவியின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரமாக நின்று கொண்டு இருந்த லாரியின் பின்பகுதியில் பயங்கர வேகத்தில் மோதியது. இதனால் கார் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி ரவியும், மதுவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் நெலோகி போலீசார், கலபுரகி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவி, மதுவின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஜேவர்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்