< Back
தேசிய செய்திகள்
திருச்சூர்: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போலி மந்திரவாதி கைது
தேசிய செய்திகள்

திருச்சூர்: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போலி மந்திரவாதி கைது

தினத்தந்தி
|
11 Jun 2022 2:16 PM IST

திருச்சூர் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதியை போலிசார் கைது செய்தனர்.

திருச்சூர்:

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வெள்ளர காடு பகுதியில் வசித்து வருபவர் ஹைதர் (வயது 58). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சிறுமியின் உடல் நிலையில் சிறிய மாற்றம் கண்ட பெற்றோர் மருத்துவர்களிடம் கொண்டு சென்று காண்பித்தார்கள். அங்கு மருத்துவர்கள் சிறுமியை சோதனை போட்டபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது.

உடனடியாக மருத்துவர்கள் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியுடன் விசாரணை நடத்தி குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமி கூறிய தகவல்படி அதே பகுதியில் இருந்த ஹைதரை போலீசார் கைது செய்து திருச்சூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதே கைதர் 2019-ஆம் ஆண்டு போலி மந்திரவாதி என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் தண்டனை அனுபவித்து தற்போது ஜாமீனில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்