< Back
தேசிய செய்திகள்
மயக்க ஊசி செலுத்தி இளம் பெண் டாக்டர் தற்கொலை
தேசிய செய்திகள்

மயக்க ஊசி செலுத்தி இளம் பெண் டாக்டர் தற்கொலை

தினத்தந்தி
|
28 March 2024 2:02 AM IST

இளம் பெண் டாக்டர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் நாயர். இவருடைய மகள் அபிராமி (வயது30). முதுகலை டாக்டர் பட்டம் பெற்ற இவர் திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வந்தார். இவருக்கும் கொல்லம்ராமன் குளங்கரையை சேர்ந்த டாக்டர் பிரதீஷ் ரகு என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிரதீஷ் ரகு மும்பையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்துக்கு பின்பு அபிராபி திருவனந்தபுரம் பி.டி.சாக்கோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் பணியில் இருந்த அபிராமி அறைக்கு சாப்பிட வந்தார். அப்போது, அவர் திடீரென அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை தற்போது நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்