< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆந்திராவில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள கடத்தல் மதுபான பாட்டில்களை ரோடு ரோலர் ஏற்றி அழித்த போலீசார்
|13 Oct 2023 10:24 AM IST
ரூ.2.5 கோடி மதிப்புள்ள கடத்தல் மதுபான பாட்டில்களை ஆந்திர போலீசார், ரோடு ரோலரை ஏற்றி அழித்தனர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.58 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள், சாலையில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டன.
பின்னர், போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் மதுபான பாட்டில்களின் மீது ரோடு ரோலரை ஏற்றி அழிக்கப்பட்டன. இதனால், சாலை முழுவதும் ரூ.2.5 கோடி மதிப்புடைய மதுபானம் ஆறு போல் ஓடியது.