போக்குவரத்து போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
|மங்களூருவில் போக்குவரத்து போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு:
மங்களூருவில் போக்குவரத்து போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ்காரர்
கதக்கை சேர்ந்தவர் வீரண்ணா. இவரது மகன் மகேஷ் சவதத்தி (வயது 31). இவர் மங்களூரு தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு பணியில் சேர்ந்த மகேஷ், ஹாசனில் போலீஸ் பயிற்சி பெற்றார். பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் மங்களூருவில் போக்குவரத்து போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
இவர் மங்களூரு சைமன் லேன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த மகேஷ், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மங்களூரு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் மகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுபற்றி மகேசின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். மகேசின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து மங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.