< Back
தேசிய செய்திகள்
ரோந்து பணியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களை தாக்கியவர் கைது
தேசிய செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களை தாக்கியவர் கைது

தினத்தந்தி
|
5 Aug 2023 12:15 AM IST

ரோந்து பணியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

சாம்ராஜ்பேட்டை:

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பரூக் நகரை சேர்ந்தவர் அப்ரித் கான். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் விசாரணையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை சாம்ராஜ்பேட்டை 2-வது கிராஸ் சாலையில் அப்ரித் கான் தனியாக நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக விஜயகுமார் மற்றும் சிவபிரசாத் ஆகிய 2 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின்பேரில் அப்ரித் கானை போலீசார் அழைத்து விசாரித்தனர். மேலும் குற்றப்பின்னணி இருக்கிறதா என்பதை அறிவதற்கு, அவரது கைவிரல் ரேகையை பதிவு செய்யுமாறு கூறினர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்ரித்கான், 2 பேரையும் தாக்கினார். அப்போது அங்கு ரோந்தில் ஈடுபட்டிருந்த மற்ற போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அப்ரித்கானை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்