< Back
தேசிய செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் அடுத்த ஆண்டு இணைக்கப்படும்: பிரபல ஜோதிடர் கணிப்பு
தேசிய செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் அடுத்த ஆண்டு இணைக்கப்படும்: பிரபல ஜோதிடர் கணிப்பு

தினத்தந்தி
|
7 April 2024 8:20 PM IST

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஜோதிடராக விளங்கும் ருத்ர கரன் பர்தாப்பை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றுகிறார்கள்.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்று பிரபல ஜோதிடர் ருத்ரா கரன் பர்தாப் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஜோதிடராக விளங்கும் ருத்ர கரன் பர்தாப்பை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றுகிறார்கள். இவர் அவ்வப்போது, தனது எக்ஸ் பக்கத்தில் தனது கணிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது, ருத்ரா கரன் பர்தாப் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக ருத்ரா கரன் பர்தாப் கூறியிருப்பதாவது:- ஜோதிட ரீதியாக, பிரதமர் மோடி தற்போது செவ்வாய் மஹாதசையை கடந்து வருகிறார். இந்த கால கட்டத்தில் நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படும் என்று யூகிக்கப்படுகிறது. எனவே, ஏப்ரல் 2025 - செப்டம்பர் 2025 கால கட்டத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதுபோக பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்பார். இது பரவலாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். என்று கூறியிருக்கிறார்.

ஜோதிடர் ருத்ராவின் பல கணிப்புகள் இதற்கு முன்பாக அப்படியே நடந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் தளத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து கணிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், வரும் 2024 மார்ச் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் ரீதியாக கடுமையான பின்னடைவை சந்திப்பார் என்று கூறியிருந்தார். ருத்ராவின் இந்தகணிப்பு அப்படியே பலித்தது போல உள்ளது. அதாவது தற்போது கெஜ்ரிவால் கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்