< Back
தேசிய செய்திகள்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, அதை திரும்பப்பெறுவோம் - அமித்ஷா
தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, அதை திரும்பப்பெறுவோம் - அமித்ஷா

தினத்தந்தி
|
19 May 2024 9:53 AM GMT

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, அதை திரும்பப்பெறுவோம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

லக்னோ,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை (20ம் தேதி) 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, 6ம் கட்ட தேர்தல் 25ம் தேதியும் 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், 6ம் கட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது,

பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்திருப்பதால் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டுமென பரூக் அப்துல்லாவும் மணிசங்கர் அய்யரும் கூறுகின்றனர். ராகுல்காந்தி புனிதமான பிரயாக்ராஜில் இருந்து உங்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன்,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. நாங்கள் அதை திரும்பப்பெறுவோம். 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த 4 கட்ட தேர்தலிலும் இந்தியா கூட்டணி துடைத்தெறியப்பட்டுள்ளது. 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற மோடி வேகமாக முன்னேறி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்