< Back
தேசிய செய்திகள்
கார்கில் வெற்றி தினம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை
தேசிய செய்திகள்

கார்கில் வெற்றி தினம்: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை

தினத்தந்தி
|
26 July 2024 11:09 AM IST

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

லடாக்,

கடந்த 1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. கார்கிலில் கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில் உயிர்த்தியாகம் பல செய்து பாகிஸ்தான் படையினரை நமது இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர்.

கார்கில் போர் வெற்றி தினத்தை நினைவு கூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்கில் போர் வெற்றி தினத்தின் 25 வது ஆண்டு சில்வர் ஜூப்ளி என்பதால் பிரதமர் மோடி கார்கிலுக்கு சென்றார். பின்னர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி அங்கு பேசியதாவது:-

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம். இந்தியா மீதான தாக்குதல்கள் (பாகிஸ்தான்) இன்றும் தொடர்கிறது. கடந்த கால தவறுகளில் பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவர். நமது ராணுவ வீரர்கள் முழு பலத்துடன் பயங்கரவாதத்தை நசுக்குவார்கள்" என்றார்.

மேலும் செய்திகள்