< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது - பிரதமர் மோடி உரை

தினத்தந்தி
|
28 May 2023 7:40 AM IST

தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

டெல்லி,

Live Updates

  • புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!
    28 May 2023 2:11 PM IST

    புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

    புதுடெல்லி

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. திறப்பு விழா 2 கட்டங்களாக நடைபெற்றது. காலையில் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. பூஜைக்கு பிறகு தேவாரம் முழங்க செங்கோல் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. செங்கோலை கையில் ஏந்தியபடி ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். முன்னதாக செங்கோல் முன் பிரதமர் மோடி தரையில் விழுந்து வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்று தமிழக செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார். செங்கோலை நிறுவிய பின்னர் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் தலைமையில் 20 ஆதீனங்கள் பங்கேற்றனர். செங்கோலை வைத்த பின்னர் ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார்

    அதையடுத்து நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் நாடாளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார்.

    அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

    அதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரிகள், நீதிபதிகள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக, பாமக, பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் உள்ளிட்ட 25 கட்சிகள் கலந்து கொண்டன. 19 கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளனர்.

    அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “நாடாளுமன்றத்தை வாஸ்து, சம்பிரதாயம் உள்ளிட்ட அனைத்தையும் பின்பற்றி கட்டி எழுப்பியுள்ளோம். வருங்காலத்தில் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என்பதால் அதை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்களின் உயிர்தான் இந்த நாடாளுமன்றம். செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. செங்கோலை வழங்கிய தமிழ்நாட்டின் ஆதீனங்களுக்கு நன்றி” என்று கூறினார்.

  • புதிய நாடாளுமன்றம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும் - பிரதமர் மோடி
    28 May 2023 2:07 PM IST

    புதிய நாடாளுமன்றம் அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும் - பிரதமர் மோடி

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் நாடாளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார். 

    அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார். அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பயணத்திலும் அழியாத சில தருணங்கள் வருகின்றன. மே 28 அத்தகைய நாள். புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும். புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்திய மக்களின் லட்சியத்தின் சின்னம். இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகிற்கு வழங்குகிறது.

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. புதிய நாடாளுமன்றம் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. புதிய பாதைகளில் பயணம் செய்தே புதிய குறிக்கோள்களை அடைய முடியும். புதிய பாதையில் புதிய பயணத்தை நம் நாடு தொடங்கியுள்ளது. உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியா முன்னேறிலாம் உலகம் முன்னேறும். புதிய நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும். இந்தியாவை உலக நாடுகள் இன்று நன்மதிப்போடு பார்க்கின்றன.

    செங்கோல் புனிதமானது, முக்கியம்த்துவம் வாய்ந்தது. அதிகார மாற்றத்துக்கான அடையாளமாக செங்கோல் திகழ்கிறது. தமிழ்நாட்டு ஆதீனங்களின் ஆசியிடன் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. செங்கோல் என்பது கடமையின் பாதையில் செல்லவேண்டும் என்பதற்கான அடையாளம். ராஜாஜி மற்றும் ஆதீனத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்புடன் செங்கோல் உருவாக்கப்பட்டது. 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது.

    மக்களவையில் புனிதமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது, இந்த செங்கோலுக்கு வரலாறு உண்டு. எப்போது விவாதம் நடந்தாலும், இச்செங்கோல் நமக்கு நியாயத்தை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் சுய சார்பு இந்தியாவை ஒளிரச்செய்துள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ஒரே இந்தியா வலிமையான இந்தியா; புதிய நாடாளுமன்றம் காலத்தின் தேவை.

    பொற்காலத்திற்கு நுழைவதற்குள் பல தடைகளை தாண்டி வந்துள்ளோம். புதிய நாடாளுமன்றம் ஏழை, எளிய மக்களின் குரலாக ஒலிக்கும். 9 ஆண்டுகளில் ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது. எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரவுள்ளதால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது. தேசத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டுச்செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபதம் ஏற்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்.

  • புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது - பிரதமர் மோடி உரை
    28 May 2023 1:10 PM IST

    புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது - பிரதமர் மோடி உரை

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடங்கியது. அப்போது பிரதமர் மோடியை கரகோஷம் எழுப்பி முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர். அதன் பின்னர் நாடாளுமன்றம், செங்கோல் குறித்த திரைப்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சபாநாயகர் ஓம் பிர்லா உரையாற்றினார்.

    அதனை தொடர்ந்து சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

    அதன் பின்னர் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    “புதிய நாடாளுமன்றம் திறப்பு வரலாற்று சிறப்புமிக்கது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பயணத்திலும் அழியாத சில தருணங்கள் வருகின்றன. மே 28 அத்தகைய நாள். புதிய நாடாளுமன்றம் தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக இருக்கும். புதிய நாடாளுமன்றம் வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்திய மக்களின் லட்சியத்தின் சின்னம். இது இந்தியாவின் உறுதியைப் பற்றிய செய்தியை உலகிற்கு வழங்குகிறது” என்று கூறினார்.

  • புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா - 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தொடக்கம்
    28 May 2023 12:24 PM IST

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா - 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தொடக்கம்

    புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் 2ஆம் கட்ட நிகழ்ச்சிகள் தேசிய கீதத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

  • 28 May 2023 11:41 AM IST

    டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை சற்று நேரத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

  • புதிய நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு
    28 May 2023 11:41 AM IST

    புதிய நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு

    புதிய நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

  • 28 May 2023 9:20 AM IST

    புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணியாளர்களை சால்வை அணிவித்து பிரதமர் நரேந்திர மோடி கவுரவித்தார் 

  • கட்டுமானத் தொழிலாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி..!
    28 May 2023 8:52 AM IST

    கட்டுமானத் தொழிலாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி..!

    நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார். கட்டுமானப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.

    அதனை தொடர்ந்து வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறினார்.

  • 28 May 2023 8:19 AM IST

    புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கான கல்வெட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

  • நாடாளுமன்ற திறப்பில் அனைத்து மத பிரார்த்தனை..!
    28 May 2023 8:15 AM IST

    நாடாளுமன்ற திறப்பில் அனைத்து மத பிரார்த்தனை..!

    புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பையொட்டி இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் உள்ளிட்ட அனைத்து மத பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. சங்கராச்சாயார்கள், பாதிரியார்கள், மதகுருமார்கள் பங்கேற்று அனைத்து மத பிரார்த்தனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்