< Back
தேசிய செய்திகள்
நாசிக்கில் தேசிய இளைஞர் திருவிழா: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
தேசிய செய்திகள்

நாசிக்கில் தேசிய இளைஞர் திருவிழா: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
11 Jan 2024 5:30 AM IST

நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழா(யூத் எக்ஸ்போ) நாளை தொடங்குகிறது.

நாசிக்,

நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர்கள் திருவிழாவை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் திருவிழா(யூத் எக்ஸ்போ) நாளை தொடங்குகிறது. விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து மண்டல கமிஷனர் ராதாகிருஷ்ண காமே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இளைஞர் திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரிகள் அந்தந்த துறைகளின் பொறுப்பாளர்கள் கிட்டத்தட்ட முடித்துவிட்டனர். விழாவுக்கு வரும் இளைஞர்களுக்காக நகரின் பல்வேறு பகுதிகளில் 2,200-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்