< Back
தேசிய செய்திகள்
நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து விட்டு இளைஞர்களை வேலையின்றி விட்டுவிட்டார், பிரதமர் - ராகுல்காந்தி
தேசிய செய்திகள்

நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து விட்டு இளைஞர்களை வேலையின்றி விட்டுவிட்டார், பிரதமர் - ராகுல்காந்தி

தினத்தந்தி
|
5 July 2022 12:42 AM IST

நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து விட்டு இளைஞர்களை வேலையின்றி விட்டுவிட்டார், பிரதமர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

துணை ராணுவ படை தேர்வில் தேர்ச்சி ெபற்ற போதிலும், இன்னும் பணி நியமன கடிதம் வழங்கப்படாததை கண்டித்து சில இளைஞர்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். அந்த வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி வெளிநாடுகளில் கூட தன்னுடைய நண்பர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கிறார். ஆனால் சொந்த நாட்டு இளைஞர்களை வேலை இல்லாதவர்களாக விட்டு விட்டார். அந்த இளைஞர்கள் மீது ஏன் இவ்வளவு பாரபட்சம் காட்டுகிறார்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்