< Back
தேசிய செய்திகள்
வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடிக்கு ஒரே நாளில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள்
தேசிய செய்திகள்

வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடிக்கு ஒரே நாளில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள்

தினத்தந்தி
|
21 Sept 2023 4:03 AM IST

வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 10 லட்சத்தை கடந்து உள்ளது.

புதுடெல்லி,

சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கு இடம் உண்டு. பிரபல சமூக ஊடகங்களான முகநூல், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார்.

கடந்த வாரம் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய சிறப்பம்சமான வாட்ஸ்அப்பில் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப் சேனல் வசதியில், எழுத்து வடிவ தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதி உள்ளது.

இந்நிலையில் இந்த வாட்ஸ் அப் சேனலில் கடந்த 19-ந்தேதி மாலை பிரதமர் மோடி கணக்கு தொடங்கினார்.

பிரதமர் மோடி பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்து வாட்ஸ்அப் சேனலில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் மக்களுடன் நெருங்கி பழகவும் தொடர்புகளை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும் என குறிப்பிட்டு இருந்தார்.

பிரதமர் மோடி வாட்ஸ் அப் சேனலில் இணைந்த ஒரே நாளில் (24 மணி நேரம்) அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து உள்ளது

மேலும் செய்திகள்