< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடியின் ரோட் ஷோ.. பெங்களூருவில் 35 சாலைகளில் வாகனங்கள் செல்ல நாளை தடை
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் ரோட் ஷோ.. பெங்களூருவில் 35 சாலைகளில் வாகனங்கள் செல்ல நாளை தடை

தினத்தந்தி
|
5 May 2023 11:33 AM GMT

பெங்களூருவில் நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

பெங்களூரு,

சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி கர்நாடகம் வருகை தந்துள்ளார். பெங்களூருவில் நாளை (சனிக்கிழமை) பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

அதாவது இன்று காலை 10 மணிக்கு பெங்களூரு தெற்கு பகுதி சோமேஷ்வரா பவன், ஆர்.பி.ஐ. மைதானத்தில் இருந்து தொடங்கி மல்லேசுவரம் சாங்கி டாங்கி ஏரி வரை ஒட்டு மொத்தமாக 26.5 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார்.இந்த நிலையில், பிரதமர் மோடி ஊர்வலத்தையொட்டி பெங்களூருவில் 35 சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை அந்த 35 சாலைகளிலும் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்