< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
|1 Oct 2022 9:22 AM IST
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிறந்த நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத்திற்காக அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். இந்தியாவின் ஜனாதிபதியாக பின் தங்கியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அதிகாரம் அளிப்பதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றினார். நல்ல உடல் நலம், நீண்ட ஆயுளுடன் வாழட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.