50 சதவீத மக்களின் ஆசியுடன் பிரதமர் மோடி 3வது முறையாக வெற்றி பெறுவார்: மத்திய மந்திரி
|வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அங்குல் (ஒடிசா),
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்த மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், நாட்டில் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் ஆசியுடன் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெறுவார் என்று கூறினார்.
ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் 'விக்ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா' பயனாளிகளுடன் ஒரு கண்காட்சியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். விவசாயிகளின் கிரெடிட் கார்டு, உஜ்வாலா யோஜனா திட்டத்தில் அதிக எரிவாயு இணைப்புகள், வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு வழங்க உத்தரவாதம், இந்த உத்தரவாதங்களில் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. நாட்டின் 50 சதவீதத்துக்கும் அதிகமான மக்களின் ஆசியுடன் பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக உள்ளார்" என்று அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டு பாஜகவிற்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது, ஏனெனில் அது இந்தியாவின் இதயப் பிரதேசமான மாநிலங்களில் விரிவான வெற்றிகளைப் பதிவுசெய்தது. மேலும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு களம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.