வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி
|வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார்.
வாரணாசி,
7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காகப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். 3-வது முறையாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற ஜூன் 1-ந்தேதி, 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலின்போது இந்த தொகுதிக்கான வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் அவர் உள்ளார். இதற்காக வாரணாசி நகரில் பிரதமர் மோடி நேற்று வாகன பேரணியில் ஈடுபட்டார்.
இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று பிற்பகலில் பிரதமர் தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் அங்கு சுமார் 5 கிமீ தொலைவிற்கு மீண்டும் வாகன பேரணி செல்கிறார். அப்போது அவர் காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வாகன பேரணியில் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க.வினர் பல சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.