< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி நாளை திருப்பதி பயணம்: உச்ச கட்ட பாதுகாப்பு
|25 Nov 2023 7:13 PM IST
பிரதமர் மோடி திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பதி,
தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாளை மாலை 7.00 மணிக்கு திருப்பதி வருகிறார். ரேனிகுண்டா விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, கவர்னர் அப்துல் நசீர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு சென்று அங்குள்ள விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர், திங்கட்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்து காலை 10.25 மணிக்கு விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி மீண்டும் விமானம் மூலம் டெல்லி செல்ல இருக்கிறார். பிரதமர் மோடி திருப்பதி வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.