< Back
தேசிய செய்திகள்
அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஐ.நா.வில் உரையாற்றுகிறார்
தேசிய செய்திகள்

அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்: ஐ.நா.வில் உரையாற்றுகிறார்

தினத்தந்தி
|
28 Aug 2024 9:23 PM IST

பிரதமர் மோடி கடைசியாக 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றார்.

புதுடெல்லி,

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் செப். 24 முதல் 30ம் தேதி வரை நியூயார்க்கில் நடக்கிறது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுவர்.

இந்நிலையில் அடுத்த மாதம் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கின் நசாவு கொலீசிய மைதானத்தில் அமெரிக்க இந்தியர்கள் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

பின்னர் செப். 26-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். மோடியின் பயணத்திட்டம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சமீபத்திய ரஷியா மற்றும் உக்ரைன் பயணங்களுக்குப் பிறகு அமெரிக்க பயணம் முக்கியமான பயணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை வெள்ளை மாளிகை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. மோடி கடைசியாக செப்டம்பர் 2021-ல் நடைபெற்ற ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்