< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி..!
|12 Jan 2024 11:11 AM IST
பொங்கல் விழாவை சிறப்பாக நடத்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
புதுடெல்லி,
தமிழர்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. விவசாயிகள் பொங்கல் பண்டிகை அன்று புத்தாடை உடுத்தி புதுப்பானையில் பொங்கலிட்டு கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய இணை மந்திரி இல்லத்தில் வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவருடன் மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் பிற மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொங்கல் பண்டிகையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், தனது இல்லத்தில் விழாவை சிறப்பாக நடத்த மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.