< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாட்டு மக்களுக்கு சற்று நேரத்தில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
|11 March 2024 5:15 PM IST
பிரதமர் இன்று மாலை 5.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால்,வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை என அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் பரபரப்பு உச்ச கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி இன்று வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.