< Back
தேசிய செய்திகள்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல்
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல்

தினத்தந்தி
|
16 May 2023 1:08 PM IST

பாராளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் தற்போது இருக்கும் பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது. எனவே அதற்கு பதிலாக சென்டிரல் விஸ்டா என்ற பெயரில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ராஜபாதை (கடமைப் பாதை) சீரமைப்பு பொதுவான மத்திய செயலகம், பிரதமருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், துணை ஜனாதிபதிக்கான புதிய மாளிகை ஆகிய புதிய கட்டுமானங்களின் ஓர் அங்கமாக பாராளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது.

டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி வருகிறது. பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த நிலையில் பாராளுமன்ற புதிய கட்டிடம் வருகிற 28-ந்தேதி திறக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. பாராளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

மேலும் செய்திகள்