'பிபோர்ஜோய் புயல்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
|பிபோர்ஜாய் புயலின் தாக்கம் குறித்தும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
புதுடெல்லி,
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள 'பிபோர்ஜோய்' என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். அதி தீவிர புயலாக மாறியுள்ள இந்த பிபோர் ஜாய் வரும் 15 ஆம் தேதி சவுராஷ்டிரா - கட்ச் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் மும்பை கடல் பகுதியை நெருங்கியுள்ளது. கடல் சீற்றமாக காணப்படுகிறது. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே, இன்று பிற்பகல் பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். பிபோர்ஜாய் புயலின் தாக்கம் குறித்தும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.