< Back
தேசிய செய்திகள்
ராஜஸ்தானின் முதல் வந்தேபாரத் ரெயிலை வரும் 12ம் தேதி தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

ராஜஸ்தானின் முதல் வந்தேபாரத் ரெயிலை வரும் 12ம் தேதி தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
10 April 2023 11:48 PM IST

ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் புதன்கிழமை தொடங்கி வைக்கிறார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரெயில் பயணத்தை விரைவாக நிறைவு செய்யும் என்று ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயிலை பிரதமர் மோடி புதன்கிழமை காலை 11 மணிக்கு காணொலி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் டெல்லி கண்டோன்மென்ட் மற்றும் அஜ்மீர் இடையேயான தூரத்தை 5 மணி 15 நிமிடங்களில் கடக்கும். தற்போது இயக்கப்பட்டுவரும் சதாப்தி எக்ஸ்பிரஸ், 6 மணி நேரம் 15 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்