மற்ற கட்சியின் வாக்குறுதி போல இருக்காது.. பா.ஜனதா சொல்வதை செய்யும்: பிரதமர் மோடி
|கொரோனா போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தபோது, இந்தியா அழிந்துவிடும் என நினைத்தனர். ஆனால் அந்த நெருக்கடியிலும் உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றினோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், நாடு மாற்றமடைவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். 10 வருடங்களுக்கு முன் நாட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது நினைவிருக்கிறதா? காங்கிரஸின் பெரிய ஊழல்கள் மற்றும் கொள்ளையினால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, உலகளவில் இந்தியாவின் நற்பெயர் சரிந்தது.
நாங்கள் நேர்மையாக வேலை செய்தோம். கோவிட் போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தபோது, இந்தியா அழிந்துவிடும் என நினைத்தனர். ஆனால் அந்த நெருக்கடியிலும் உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றினோம். பா.ஜனதா நிச்சயம் சொல்வதை செய்யும். மற்ற கட்சிகளை போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம். தீர்மான அறிக்கையாக வாக்குறுதி வழங்குவோம். 2019ல் நாங்கள் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்றார்.