பிரதமர் மோடியின் செயல்களால் இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது- வெங்கையா நாயுடு பேச்சு
|பிரதமர் மோடி பல அரசியல் தலைமைப் பிரிவினரை அடிக்கடி சந்திக்க வேண்டும் என வெங்கையா நாயுடு பேசினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் செயல்களால் இந்தியாவின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
புது டெல்லியில் இன்று நடைபெற்ற பிரதமர் மோடியின் உரைகள் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சுகாதாரம், வெளியுறவுக் கொள்கை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு சாதனை படைத்ததற்காக பிரதமர் மோடியை பாராட்டினார்.
இந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
இந்தியாவின் குரல் இப்போது உலகம் முழுவதும் ஒலிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில், இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இதற்குக் காரணம் பிரதமர் மோடியின் செயல்கள் மற்றும் மக்களுக்கு அவர் அளித்து வரும் வழிகாட்டுதல் தான்.
பிரதமர் மோடி சாதனைகள் செய்துள்ள போதிலும், சில தவறான புரிதல்களால், சில அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக சிலர் இன்னும் அவரது வழிமுறைகளைப் ஏற்று கொள்ளவில்லை.
பிரதமர் மோடி பல அரசியல் தலைமைப் பிரிவினரை அடிக்கடி சந்திக்க வேண்டும். அப்போது காலப்போக்கில், இந்த தவறான புரிதல்களும் விலகும். அனைத்து கட்சிகளும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.