தேசியக்கொடியை டிபியாக வைக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
|சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் (15-ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றுகிறார். இதையொட்டி தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதைபோல சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த நிலையில், 76-வது சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முகப்பு படமாக (டிபி) வைக்க பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டிற்கும் நமக்கும் இடையிலான பிணைப்பை ஆழப்படுத்தும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கவும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.