< Back
தேசிய செய்திகள்
கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது - பிரதமர் மோடி புகழாரம்
தேசிய செய்திகள்

கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது - பிரதமர் மோடி புகழாரம்

தினத்தந்தி
|
15 July 2024 6:39 PM IST

கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பெருந்தலைவர் காமராஜருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கல்வித்துறைக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், காமராஜரின் பிறந்தநாளில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்துகிறேன். அவரது தொலைநோக்கு தலைமை பண்பு மற்றும் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார். கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு காமராஜர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது. நீதியும் கருணையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான காமராஜரின் லட்சியங்களை நிறைவேற்றும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்