< Back
தேசிய செய்திகள்
மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை
தேசிய செய்திகள்

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை

தினத்தந்தி
|
30 Jan 2024 11:12 AM IST

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

புதுடெல்லி,

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியை தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

மகாத்மா காந்தியின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்ய எங்களை ஊக்குவிக்கின்றன என்றார். மற்றொரு பதிவில்,

பூஜ்ய பாபுவின் புண்ணிய திதியில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன், நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன்.

அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தி, 1948-ம் ஆண்டு இதே நாளில் நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்