< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி பிறப்பால் ஓபிசி இல்லை.. மக்களை ஏமாற்றுகிறார்: ராகுல் காந்தி தாக்கு
|8 Feb 2024 2:14 PM IST
பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் பிறந்தவர் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தொடங்கியது. அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பிகார், ஜார்கண்ட் மாநிலத்தை கடந்து தற்போது ஒடிசாவில் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்கு மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது:
"பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (ஓபிசி)பிறந்ததாக நாட்டையே ஏமாற்றி வருகிறார் அவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறக்கவில்லை. பொதுப் பிரிவில் இருந்த 'தெலி' சாதியில்தான் மோடி பிறந்தார். 2000-ஆம் ஆண்டு பாஜக ஆட்சியின் போதுதான் அந்த சாதியை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் மாற்றினர். இதனை அனைத்து பாஜக தொண்டர்களிடமும் கூறுங்கள்" என்றார்.